Tuesday, February 07, 2012

திருக்கடையூர் கோவில் - ஆறுபதாம் கல்யாணமா?


சென்ற பதிவில் நான் போட்ட திருக்கடையூர் கோவில் பதிவை பார்த்து என்னிடம் சில பேர் அக்கோவிலை பற்றியும், அதனுடைய சிறப்பு அம்சத்தை பற்றியும், அங்கு சென்று வந்தால் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கின்றனர். திருக்கடையூர் கோவிலை பற்றி உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் வீட்டிற்கு பின்னால் இருந்த என் குல வம்சவழியினர், 75ம் வயது சிறப்பு கல்யாணத்தை செய்து கொண்டனர். அதனால் தான் அம்மாதிரியான கல்யாணத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு, ஆராய தொடங்கினேன். எனக்கு தெரிந்த சென்னை, மதுரை மற்றும் திருச்சி மக்களிடம் நான் ஆறுபதாம் கல்யாணம் பற்றி கேட்டும் போது, இதே கோவிலை தவறான பெயருடன் சொன்னார்கள். நான் இக்கோவிலின் பெயரை சொன்ன உடன், ஆம் என்று சொன்னார்கள்.

நான் அந்த கோவிலுக்கு சொல்லும் பொழுது, அங்கு மூன்று கல்யாண நிகழ்ச்சிகளை காண முடிந்தது. பார்க்கும் போது எல்லாமே ஆறுபதாம் கல்யாணம் போல் தான் இருந்தது. ஆனால் எங்குமே கூட்டம். மூன்று அல்லது நான்கு பேருந்துகளை பார்க்க முடிந்தது. நான் பொது அறிவு வேண்டி, இந்த விழாவை பற்றி கேட்க, கோவில் அலுவலகம் சென்றேன். அவர்கள் போட்ட பட்டியல்.

கோவிலுக்கு கட்ட வேண்டிய பணம் - ~ ரூ.1526 . இரண்டு விதமான திருகல்யாணங்கள் உள்ளன. முதல் விழாவுக்கு ~ ரூ.4000 (இரண்டு மணி நேரம் பூஜை) மற்றும் இரண்டாம் விழாவுக்கு ~ ரூ.8500 (நான்கு மணி நேரம் பூஜை).  நம்முடைய பொருளாதார சூழ்நிலையை பொருத்து ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம். அது போக, நாம் வாங்கி கொண்டு செல்ல வேண்டிய சில பொருட்களை பட்டியல் இட்டனர்.

இப்பதிவின் காரணத்திற்கு வருவோம். மேற்சொன்ன அனைத்து செலவுகள் செய்தால் கூட, சிறப்பாக விழா இருக்கும் என்பது சொல்ல முடியாது என்பது சில பேரின் கருத்து. இதற்கு காரணம் இக்கோவிலை பற்றி பல பேருக்கு தெரிந்து விட்டதால், கூட்டம் அலை மோதுகிறது. இதையே பயன்படுத்தி, புனிதமாக செய்ய வேண்டிய கல்யாணத்தை, வருமானம் வரும் தொழிலாக நினைத்து  செய்ய ஆரம்பித்து விட்டனர். நம்மிடம் எவ்வளவு பணத்தை பிடுங்கி செய்ய முடியுமோ, அவ்வளவு அவர்கள் பிடுங்க நினைப்பார்கள் என்று கேள்வி பட்டேன்.

இரண்டாவது காரணம், தென் தமிழ் நாட்டில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் இருந்தும் ஐந்து மணி நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். ஆறுபதாம் கல்யாணம் என்பதால், அனைத்து சொந்தங்களையும் அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம். அதனால் பேருந்தை எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை. புதன் கிழமை கல்யாணம் என்றால், செவ்வாய் மாலை பொழுதில் சிறு பூஜை நடத்த வேண்டி இருக்கும் மற்றும் புதன் கிழமை காலையில் விழா இருக்கும். இதன் காரணமாக செவ்வாய் கிழமை மதியமே அங்கு சென்று தங்கி விட வேண்டும். ஆக மொத்தம் அழைத்து சென்ற அனைவருக்கும் தங்க ஏற்பாடு, உணவு என்று பார்க்கும் போது, கண்ணை கட்ட ஆரம்பித்து விடுகிறது.

எனக்கு மனதில் இருந்த அனைத்து இக்கோவிலின் அனைத்து விஷயங்களையும் எழுதி விட்டேன். இப்பதிவில் இருக்கும் அனைத்து விஷயங்களும், நான் பார்த்து, கேட்டது மற்றும் என் கருத்து மட்டுமே. மீண்டும் கோவில் மற்றும் சில புனிதமான விஷயங்கள், பணத்திற்கு அடிமை ஆகி அதன் உண்மையான நிறத்தை இழந்து விட்டது என்பதற்கு ஆதாரமாக இதை கருதுகிறேன்.

No comments: